சுடச்சுட

  

  அறிமுக இயக்குனர் ஸ்ரீ இயக்கும் படம் ‘டமால் டுமீல்’. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  இந்தப் படத்தின் கதை என்னவென்றால், 5,10 லஞ்சம் கொடுத்தாவது தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான்.

  இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான். இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. அவன் செய்த தவறு என்ன, ஏன் இவர்கள் இவனை தேடுகிறார்கள், மணி இவர்களிடம் சிக்கினானா அல்லது தப்பினானா என்பது முடிவு.

  கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தில் வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்க, தமன் இசையமைக்கிறார். ஆர்.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது ’டமால் டுமீல்’ படம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai