சுடச்சுட

  

  தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு: அரசாணைக்கு இடைக்காலத் தடை

  By dn  |   Published on : 10th April 2014 11:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  HighCourt

  தமிழ்த் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் அரசாணைக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  வழக்குரைஞர் ஜி.பி.மோட்சம் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி தமிழக அரசு ஒரு ஆணை வெளியிட்டது. அதில், தமிழ்ப் பெயர்கள் கொண்ட திரைப்படங்களுக்கு முழுவதுமாக கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

  அதன் பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பழைய திரைப்படங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

  அதன் பிறகு, கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், தமிழ்ப் பெயர்கள் கொண்ட பழைய மற்றும் புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதற்காக குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கியது.

  அதில், தமிழ்த் திரைப்படம் கண்டிப்பாக யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். படம் முழுவதும் தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், தேவைப்பட்டால் சில காட்சிகளில் இதர மொழியைப் பயன்படுத்தலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

  இதன் மூலம், தமிழ்ப் பெயர்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்ப் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கும் மற்ற திரைப்படங்களைப் போல கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இவை சட்டவிரோதமானது. தமிழ்ப் பெயர் கொண்ட திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கால் பார்வையாளர்கள் பயன்

  பெறுவதில்லை.

  திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் பயன் பெறுகின்றனர். அதனால், அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்க உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேளிக்கை வரி விலக்கு தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என பல கோரிக்கைகள் மனுவில் கோரப்பட்டது.

  இந்த மனுக்கள் தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஏப்.10) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு பல்வேறு சமயங்களில் அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பல முறை அரசுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

  ஆனால், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிப்பது குறித்து அரசு எந்த அக்கறையையும் காட்டவில்லை. இது குறித்து எந்தக் கருத்தையும் அரசு தெரிவிக்கவில்லை. இவையனைத்தையும் பார்க்கும்போது, மனுதாரர்களின் விருப்பப்படியும் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21-ஆம் தேதி பிறப்பித்த அரசாணைக்கு அடுத்த விசாரணை வரை தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்

  பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai