சுடச்சுட

  
  surya

  சூர்யா-வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் மிக எளிய முறையில் நடைபெற்றது.

  சிங்கம் 2வின் வெற்றிக்குப் பிறகு சூர்யா லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த நவம்பர் மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படம் சுதந்திர தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.

  இப்படத்தினைத் தொடர்ந்து சூர்யா, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில் இன்று சித்திரைத் திருநாள் என்பதால் சூர்யா-வெங்கட் பிரபு இணையும் புதிய படத்தின் பூஜையை சென்னையில் மிக எளிய முறையில் நடத்தினர். இந்த பூஜையில் நடிகர் சிவக்குமார், இயக்குநர்கள் பாலா,  ஹரி, சாந்தகுமார், மனோபாலா, பாண்டிராஜ், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ராதாரவி, கார்த்தி, நாசர், கமீலா நாசர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், பிரமிட் நடராஜன், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

  படப்பிடிப்பை கூடிய சீக்கிரம் ஆரம்பிக்க இருக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறார். படத்தின் மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வெங்கட் பிரபுவின் ரெகுலர் ஃபார்மட்டான, காமெடி கலந்த ஆக்ஷன் படமாகத்தான் இப்படமும் உருவாகப் போகிறதாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai