சுடச்சுட

    
    Arya

    ஆரம்பம் வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன் தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார்.

    இந்த முறை பிரபல வாரஇதழில் வெளிவந்து புகழ்பெற்ற யட்சம் என்ற தொடரை அதே பெயரிலேயே இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நாயகர்களாக நடிக்கிறார்கள். விஷ்ணுவர்தன் படத்தை இயக்குவதோடு யு.டிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.

    இந்தப் படத்திற்கான பூஜை தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று எளிமையாக நடைபெற்றது. நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆர்யா ஏற்கெனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களிலும் அவர் நாயகர்களில் ஒருவராக மட்டுமே நடித்திருப்பார்.

    அந்தவகையில் பார்த்தால் ஆர்யா இப்போது விஷ்ணுவர்தனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படமும் இதே மாதிரி இரண்டு ஹீரோ சப்ஜெட் படம்தான். இதில் இன்னொரு நாயகனாக விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவிலேயே துவங்க இருக்கிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai