சுடச்சுட

  

  கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க பொய் சொன்ன வில்லன் நடிகர்

  Published on : 17th April 2014 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mansoor

  மன்சூர் அலிகான் தானே தயாரித்து நடித்து இயக்கி வரும் படம் ‘அதிரடி’. வழக்கமாக மன்சூர் அலிகானின் திரைப்படங்கள் பெரிய பெயர்களைக் கொண்டிருக்கும். இந்த முறை அதற்கு மாறாக ஒரு சொல் தலைப்பில் தயாராகும் இந்தப் படம் ஒரு வியப்புதான்.

  படத்தில் அவர் ஒரு கழைக் கூத்தாடியாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிப்பது அலிஷா. படத்திற்கு இசையும் மன்சூர் அலிகானே. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் செல்வமணி மன்சூர் அலிகான் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை சொன்னார்.

  கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க வந்தபோது குதிரை ஏற்றம் தெரியுமா என்று கேட்டேன். உடனே அவர் அதற்கு தெரியும் என்றார். அவர் கூறியதை நம்பி குதிரை மீது அமர்ந்து வரும் காட்சியில் நடிக்க வைத்தேன். ஆனால் அவர் குதிரையில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அதன்பிறகுதான் தனக்கு குதிரை ஓட்ட தெரியாத விஷயத்தை சொன்னார்.

  முதலில் கேட்ட போதே சொன்னால் படத்திலிருந்து நீக்கிவிடுவார்கள் என்பதற்காக பொய் சொன்னதாக அப்போது தெரிவித்திருக்கிறார். இவ்வாறு மன்சூர் அலிகான் பற்றி கூறினார் செல்வமணி.

   

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai