சுடச்சுட

    
    ajith

    இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று அஜித்-கௌதம் மேனன். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.

    கத்தியை போன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பையும் அதிரடி ஆக்ஷன் காட்சியுடன் துவங்கி இருக்கிறார்கள். ஆமாங்க, கடந்த மூன்று நாட்களாக முழுக்க முழுக்க இரவு நேரத்திலேயே இந்த சண்டைக்காட்சியை படம்பிடித்திருக்கிறார்கள். டான் மெகார்தர் ஒளிப்பதிவில் இந்த அதிரடி சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

    இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரிக்கிறார். படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டபோதும், இன்னும் படத்தில் பங்குபெறும் நடிகர், நடிகைகளைப் பற்றிய முழு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், படத்தின் டைட்டிலை அறிவிக்காத போதும், ’ஆயிரம் தோட்டாக்கள்’ என்று வைக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாக அந்த யூனிட்வாசிகள் கிசுகிசுக்கிறார்கள்.

    இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜித், ஒரு வேடத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறாராம். மேலும், இப்படத்தை அதிக நாட்கள் இழுக்காமல் வேகமாக முடித்து விட திட்டமிடப்பட்டிருப்பதால், முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு ஷாட்டையும் உடனுக்குடன் ஓ.கே பண்ணிக்கொண்டிருக்கும் அஜித், முந்தைய படங்களை விடஇந்த படத்தில் கூடுதல் வேகம் காட்டுகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai