சுடச்சுட

  

  நான் ஹீரோவாக நடிப்பதில் அம்மாவிற்கு விருப்பம் இல்லை: சந்தானம்

  Published on : 22nd April 2014 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  santhanam

  சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்.

  இனி தன் படக் கம்பெனி வாயிலாக படங்களை தயாரிப்பது, ஹீரோவாக நடிப்பது போன்ற அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார் அவர். இந்நிலையில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதில் அவருடைய அம்மாவிற்கு விருப்பம் இல்லையாம். இது குறித்து சந்தானம் கூறுகையில்,

  என்னை ஹீரோவாக நடிக்க கேட்டு இதற்கு முன்பே பல படங்கள் வந்தன. ஆனால் அவற்றை எதையும் ஒப்புக்கொள்ளாமல் நல்லப் படங்களுக்காக காத்திருந்தேன். அப்படி கிடைத்தது தான் இந்தப் படம். ஆனால் எனது அம்மாவிற்கு நான் ஹீரோவாக நடிப்பதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

  காரணம், எங்கே நான் ஹீரோவாக நடிக்கும் படம் வெற்றிபெறாவிட்டால் தன்னுடைய திரையுலக பயணம் முடிவுக்கு வந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அத்துடன் நான் காமெடியனாக நடித்துக்கொண்டு இருக்கும்போது கைநிறைய படங்களுடன் பிஸியாக இருப்பேன்.

  ஆனால் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டால் வருஷத்திற்கு ஒரு படம் தான் நடிப்பேன் என்றும் நினைத்துவிட்டார். என்னதான் எங்க அம்மா என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டாலும் எனக்காக அதிகம் பிரார்த்தனை செய்பவர் அவர் தான்” என்று கூறினார் சந்தானம்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai