சுடச்சுட

  
  vishal

  நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திற்கு பிறகு ஹரி இயக்கும் பூஜை படத்தில் நடிக்கிறார் விஷால்.

  சமீபத்தில் பூஜை திரைப்படத்திற்கான ஃபோட்டோஷூட் நடைபெற்றது. ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். விஷால்-ஸ்ருதி இருவரும் இணையும் முதல் படம் இது. படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது ராதிகா சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

  முதலில் இந்த வேடத்திற்கு ராதிகாவை ஒப்பந்தம் செய்ய விஷால் தயங்கினாராம். வெடி படத்தின் போது விஷால்-ராதிகாவுக்கும் இடையே பணம் தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடே இந்த தயக்கத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஹரியோ ராதிகாவை விட்டால் வேறு யாரும் அந்த வேடத்திற்கு பொருந்தமாட்டார் என விஷாலிடம் எடுத்து கூறியிருக்கிறார்.

  பின்னர் ஒருவழியாக ஹரியின் பேச்சால் சமாதனமான விஷால், ராதிகாவை ஒப்பந்தம் செய்ய முன்வந்திருக்கிறார். இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ஏற்கெனவே மூன்று பாடல்களுக்கு டியூன் செய்து முடித்துவிட்டாராம். அதில் ஒரு பாடல் குத்துப்பாடலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai