சுடச்சுட

  

  ‘மடிசார் மாமி’ தலைப்பு இப்போ ‘புளிப்பு இனிப்பு’ ஆக மாறியது..!

  Published on : 22nd April 2014 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pulippu-inippu

  பல்வேறு எதிர்ப்பு காரணமாக 'மடிசர் மாமி' படத்தின் தலைப்பை இப்போது 'புளிப்பு இனிப்பு' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் – வார்டு லைப் பிலிக் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'மடிசார் மாமி'. இப்படம் சென்சார் முடிந்து வெளியாக இருந்த நிலையில், தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இப்படத்தின் தலைப்பு 'புளிப்பு இனிப்பு' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான சுஷாந்த் கத்ரு கூறுகையில், "நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், எந்த ஒரு மனிதனின் மனதையும் பாதிப்பது நல்ல சினிமாவாகாது, என்கிற உரிய நோக்கத்தோடும் இப்படத்தின் தலைப்பை 'புளிப்பு இனிப்பு' என்று மாற்றி வைத்துள்ளோம். குடும்பங்கள் பார்க்ககூடிய நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படம் இரண்டு மணிநேரம் காமெடி கலாட்டாவாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மடிசார் மாமி என்ற தலைப்பு வைத்ததற்காக தனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

  மிதுன், மான்சி இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தை சுஷாந்த் என்பவர் தயாரித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai