சுடச்சுட

    
    anjaan

    லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'அஞ்சான்'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

    இப்படத்தில் சூர்யா, சமந்தாவோடு மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜாம்வால், ராஜ்பால் யாதவ், தலீப் தகில் உள்ளிட்ட பல இந்தி திரையுலக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.  ‘அஞ்சான்’ படத்தின் க்ளைமாக்ஸ் உட்பட படத்தின் வசனப்பகுதிக்கான படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தான் எடுக்க வேண்டி உள்ளது. அதை ஜூன் மாதம் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

    இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியானது. ஆனால் மிகப்பெரிய காயம் எல்லாம் இல்லை. சிறிய சிராய்ப்புகள் மட்டும்தான் என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் சூர்யா. மும்பை நிழல் உலக தாதா வேடத்திலும், மற்றொரு வேடத்திலும் நடித்து வருகிறார்.

    மும்பையை மையமாக எடுக்கப்பட்டு வரும் தமிழ்ப் படங்கள் வெற்றிப் பெற்று வருகிறது. அந்த வரிசையில் அஞ்சான் படமும் மும்பையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அஞ்சான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai