சுடச்சுட

  
  santhanam

  வடிவேலுவை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சந்தானமும் டுவிட்டரில் தனக்கான அக்கவுண்டை ஆரம்பித்துள்ளார்.

  தமிழ்ச் சினிமாவைப் பொறுத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தவிர, மற்ற அனைத்து சினிமா நட்சத்திரங்களும் டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஏதாவது ஒரு விஷயம் குறித்து நடிகர்களின் கருத்தை அறிய அவர்கள் வீட்டுக்குப் போய்க் காத்திருக்க வேண்டிய நிலையில் இருந்தது.

  ஆனால் நிலைமை இப்போது அப்படி கிடையாது. டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் இவற்றில் ஏதாவது ஒன்றில் நடிகர், நடிகைகள் அக்கவுண்ட் வைத்து அதன் மூலமாக தங்களை பற்றிய விவரங்களை போட்டி போட்டுக்கொண்டு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட நகைச்சுவை நடிகர் வடிவேலு டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார்.

  அந்த வகையில் இப்போது வடிவேலுவைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சந்தானமும் டுவிட்டரில் தனக்கான அக்கவுண்டை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பாக சந்தாமம் விடுத்துள்ள அறிக்கையில், ‘@iamsanthanam என்ற முகவரியில் அதிகாரபூர்வமாக டுவிட்டர் இணைய தளத்தில் இணைந்திருக்கிறேன். என்னைப் பற்றிய செய்திகள் மற்றும் என்னை இந்த முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்திருக்கிறார். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai