Enable Javscript for better performance
பசங்க டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோதிகா?- Dinamani

சுடச்சுட

    
    jothika

    வாலியில் அறிமுகமாகிய ஜோதிகா ,குஷி, தூள்,  அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னனி நடிகையாக உயர்ந்தார். காக்க காக்க, சில்லுனு ஓரு காதல், சந்திரமுகி மொழி என பல்வேறு படங்களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களிள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

    ஜோதிகாவிற்கு மொழி, சந்திரமுகி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதுகிடைத்தது. இந்நிலையில் முன்னனி நடிகையாக இருந்தபோதே திடீரென திருமணம் செய்து கொண்ட ஜோதிகா நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

    தற்போது மீண்டும் ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. குழந்தைகளை வைத்து பசங்க திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் மீண்டும குழந்தைகளை வைத்து படம் எடுக்க இருக்கிறார்.

    இதில் ஜோதிகாவை நடிக்க வைக்க சூர்யாவிடம் மட்டும் அணுகாமல் மொத்த குடும்பத்திற்குமே பாண்டியராஜ் கதையை சொல்ல பின் அனைவருக்கும் இக்கதை பிடித்துப்போக தற்போது இப்படத்திற்காக தயாராகி வருகிறாராம் ஜோதிகா. ஆனால் இந்த ஒரு படத்திற்கு மட்டுமே ஜோ க்கு நடிக்க அனுமதி கிடைத்துள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai