சுடச்சுட

  
  Colour Kannadigal

  மித்ராஸ் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வீரவிஸ்வாமித்திரன் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “கலர் கண்ணாடிகள்”.

  இந்த படத்தில் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக திவ்யாஸ்ரீதரன் அறிமுகமாகிறார். மற்றும் கோவைபாபு, சௌந்தர்ராஜன், பிளாக்பாண்டி, கொட்டாச்சி, வைஷாலி, பானுமதி, புருஷோத்தமன், குணா ஆகியோருடன் திருநங்கை ஜோதி இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

  மகிபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இனியவன் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ர.ராகுல்.

  இப்படம் பற்றி இயக்குனர் கே.ர.ராகுலிடம் கேட்டோம்…….

  நான் வண்ணத்திரை, சின்னத்திரையில் நடித்து பெற்ற அனுபவமே என்னை இயக்குனராக மாற்றியது. என் மேல் நம்பிக்கை வைத்து என்னை இயக்குனராக மாற்றிய தயாரிப்பாளர் வீரவிஸ்வாமித்திரன் கடவுள் மாதிரி.

  இயக்குனராக மாறினாலும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க தயார். நளனும் நந்தினியும் படத்தில் என் வேஷம் பாராட்டப்படும். நானெல்லாம் நடிக்க ஆசைப்பட்ட போது எவ்வளவு போராட வேண்டி இருந்தது. இந்த படத்து ஹீரோ ரொம்ப அதிர்ஷ்டசாலி. ஹீரோ இல்லாமல் படப்பிடிப்பை துவங்கினோம். படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்தவர் ரொம்ப லட்சணமாக இருந்தார். அவரை கேட்டோம் ஓ.கே என்றார். இரண்டே நாட்களில் ஹீரோவாகி விட்டார்.

  இந்த படத்தில் உள்ள மூன்று பாடல்களை முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கினோம். நல்ல கமர்ஷியல் படமாக “கலர் கண்ணாடிகள் உருவாகி வருகிறது என்றார் கே.ர.ராகுல்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai