சுடச்சுட

  
  vijay-miltan

  சுசீந்திரன் படத்திலிருந்து திடீரென பாதியில் விலகினார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

  ‘வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்து வீர தீர சூரன் என்கிற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஷ்ணு நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளர் பொறுப்பை விஜய் மில்டன் கவனித்து வந்தார். இந்நிலையில் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பொறுப்பிலிருந்து விஜய் மில்டன் திடீரென விலகியுள்ளார்.

  இது சுசீந்திரனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். பிறகு வேறு வழியில்லாமல் விஜய்மில்டனுக்கு பதிலாக இப்போது மதியை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார். சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவருக்கு நிறைய புதிய படங்கள் இயக்க வாய்ப்பு வந்தது.

  ஆனால் விஜய்மில்டன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரமை சந்தித்து கதை ஒன்றை கூறினார். இந்த கதை விக்ரமிற்கு மிகவும் பிடித்துவிடவே உடன ஓகே சொல்லிவிட்டார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடிவெடுத்த விஜய்மில்டன் சுசீந்திரன் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai