சுடச்சுட

  
  saivam

  ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் படங்கள் என்றாலே அவைகள் தரமான படங்களாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

  ‘மைனா’, ‘நேரம்’, ’நெடுஞ்சாலை’ போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது விஜய் இயக்கியுள்ள ’சைவம்’ படமும் இடம் பிடித்து விட்டது. ‘தலைவா’ படத்திற்கு பிறகு விஜய் இயக்கத்தில் நாசர், குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம் ’சைவம்’.

  சமீபத்தில் இந்தப் படத்தை உதயநிதி பார்த்திருக்கிறார். படம் மிகவும் பிடித்துவிடவே உடனே தானே வெளியிடுவதாக கூறி வாங்கிவிட்டார். இதையடுத்து சைவம் படத்தை தமிழகம் முழுக்க விரைவில் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிட இருக்கிறது.

  இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குனர் விஜய்..!

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai