சுடச்சுட

  

  மே1ம் தேதி: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஹாட்ரிக் கொண்டாட்டம்!

  Published on : 29th April 2014 11:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ajith

  மே 1ந் தேதி அஜித் பிறந்த நாள் வரவிருக்கிறது. வழக்கம்போல் இந்தப் பிறந்த நாளையும் வெகு விமர்சியாக கொண்டாட அவருடைய ரசிகர்கள் தயாராகிறார்கள்.

  மேலும் அன்றைய தினத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு அன்னதானம், இரத்த தானம் போன்ற நல்ல காரியங்கள் செய்யும் வேலைகளிலும் ரசிகர்கள் ஈடுபடவுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இதேநாளில் அஜித்தின் 25வது படமான அமர்க்களம் படத்தை டிஜிட்டல் வடிவில் மாற்றி மீண்டும் வெளியிடப்போகிறார்கள்.

  தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியமான திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. இவைதவிர, அஜித் பிறந்த நாளன்று டிவி சேனல்களிலும் சில சுவாரஸ்யங்கள் நடக்கப்போகிறது. சென்ற வருடம் இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆரம்பம் படத்தை ஜெயா டிவியில் ஒளிபரப்பப் போகிறார்கள்.

  இதற்கு போட்டியாக சன் டிவியில் வீரம் படத்தை திரையிட இருக்கிறார்கள். உச்சகட்ட மகிழ்ச்சியாக, அஜித் பிறந்த நாளான மே 1ந் தேதி கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடவிருக்கிறார்களாம். அப்போ இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு ஹாட்ரிக் கொண்டாட்டம் தான்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai