சுடச்சுட

  
  jilla

  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.

  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அவர், படத்திற்காக நான்கு பாடல்களை தயார் செய்துவிட்டராம். அனிருத் ஏற்கனவே 3 பாடல்கள் முடித்திருந்த நிலையில் இப்போது 4-ஆவது பாடலையும் கம்போஸ் செய்து விட்டாராம். இது ஒரு ரொமாண்டிக் பாடலாம். இந்தப் பாடல் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்குமாம்.

  கத்தி திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக். அதில் அனிருத் நான்கு பாடல்களை முடித்துவிட்டதால் இன்னும் ஒரு பாடல் மற்றும் தீம் மியூசிக் மட்டுமே பாக்கி. மீதமுள்ள அந்த ஒரு பாடலை விஜய் பாட உள்ளாராம். மேலும் படத்தில் விஜய் தோன்றும் அறிமுக பாடலை அனிருத் தான் பாடியுள்ளார், இவருடன் ”ஹிப் ஹாப் தமிழன்” ஆதியும் இணைந்துள்ளார்.

  ‘கத்தி’ படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் ஹீரோ விஜய்க்கு ஜோடியாக சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். கூடுதல் தகவல் ஒன்றும் வந்துள்ளது. வில்லன் விஜய்க்கும் படத்தில் ஜோடி உள்ளதாம் அது சஸ்பென்ஸ். ஹீரோ விஜய் அரவிந்த் என்ற பெயரிலும், வில்லன் விஜய் ஆண்ட்ரூ என்ற பெயரிலும் நடிக்கிறார்கள். சமந்தா வேணியாகவும், சதீஷ் தாணுவாகவும் நடிக்கிறார். இப்படம் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

   

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai