சுடச்சுட

    
    Arjun-Rampal

    கடந்த ஆண்டு “நிகில் அத்வானி” இயக்கத்தில் “ஸ்ருதிஹாசன்” நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய படம் 'டி டே'.

    இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ரா அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதை. அந்த தேடலிலும், ஆக்ஷனிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒரு பாலியல் தொழிலாளி. அந்த கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.

    இந்நிலையில் டி டே படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இதனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்தபடம் வெளிவரவிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் ரெடியான உடன் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai