சுடச்சுட

  
  nayantara

  சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் தனிமையில் வாடிய நயன்தாராவுக்கு, வில்லு படம் மூலம் பிரபுதேவாவின் அன்பு கிடைத்தது.

  பின்னர் அந்த அன்பு காதலாக மாறியது. நயன்தாராவுக்காக பிரபுதேவா, தனது காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவோ பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார். மேலும் அவரது பெயரான பிரபுதேவா என்பதை பிரபு என்று ‌சுருக்கி தனது இடது கையில் பச்சை எல்லாம் குத்திக்கொண்டார்.

  சீக்கிரத்தில் மாலையும்-கையுமாக காட்சியளிப்பாளர்கள் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், தங்களது காதலை முறித்து கொண்டனர் இருவரும். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்களில் அந்த பச்சை பளிச்சென தெரிந்தது. இது நயன்தாராவுக்கு உறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

  ஆரம்பத்தில் இந்தப் பச்சையை மேக்கப் மூலம் மறைத்து வந்தவர், இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்துவிட்டாராம். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயங்கும் நயன்தாரா லேசர் சிகிச்சை மூலம் மாஜி காதலன் பெயரை அழிக்க இருக்கிறாராம். அனேகமாக சூர்யா படம் தொடங்கும்போது, நயன்தாரா கையிலிருந்து அந்த பிரபு என்கிற பச்சை காணாமல் போயிருக்குமாம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai