சுடச்சுட

  
  rama-narayanan

  பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார்.

  இதையடுத்து அவருடைய உடல் சிங்கப்பூரிலிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராம நாராயணன் உடல் மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  தொடர்ந்து இன்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன. இயக்குனர் ராம. நாராயணன் மறைவையொட்டி, தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  மரணமடைந்த இயக்குனர் ராம.நாராயணனுக்கு வயது 66. அவருடைய மனைவி பெயர், ராதா. இவர் 3 வருடங்களுக்கு முன்பே மரணம் அடைந்து விட்டார். இவர்களுக்கு முரளி என்ற மகனும், அன்பு மீனாள், உமா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai