Enable Javscript for better performance
குக்கூ வெற்றி: இயக்குனருக்கு கிடைத்த பரிசு!- Dinamani

சுடச்சுட

    
    rajumuragan_car

    கடந்த வெள்ளியன்று வெளியான குக்கூ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    பத்திரிகையாளர் ராஜு முருகன் இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். படத்தில் அட்டக்கத்தி தினேஷ், நடிகை மாளவிகா ஆகியோரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு படம் வெற்றிபெற்றால் அதற்கு சக்சஸ் மீட் நடத்துவது வழக்கம். அந்தவகையில் குக்கூ படத்திற்கான சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

    இதில் இயக்குனர் ராஜு முருகன், நடிகர் தினேஷ், நடிகை மாளவிகா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ‘குக்கூ’ படத்தில் பணியாற்றியவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது குக்கூ படத்திற்கு வரவேற்பு அளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    அதோடு நில்லாமல் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குனர் ராஜு முருகனுக்கு ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும், ராஜு முருகன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தையும் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கப் போகிறதாம். கார் மட்டும் பரிசாக கொடுத்தால் போதாது என்று நினைத்த தயாரிப்பு தரப்பு உடனே அடுத்த படத்திற்கான வாய்ப்பையும் கொடுத்து ராஜு முருகனை டபுள் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai