Enable Javscript for better performance
ஐ படத்தில் கனடா பாடகி! - Dinamani

சுடச்சுட

    
    Natalie-Di-Luccio

    இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் ‘ஐ’.

    இந்த படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டி, குறைத்து மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். ‘மதராசப் பட்டிணம்’ படத்தின் ஆங்கிலேய நாயகி எமி ஜாக்சன் விக்ரம் ஜோடியாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளதாம். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக என்று இதுவரை பல படங்கள் சொல்லப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

    ஆனால், இந்தப் படம் உண்மையிலேயே ஆங்கிலப் படங்களுக்கு இணையாக என்ற அளவில் இருக்குமாம். படத்தின் இசை வரும் செப்டம்பர் 15ம் தேதியன்று அதாவது நாளை பிரம்மாண்டமாக வெளியிடப் பட உள்ளது. ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்துகொண்டு இதனை வெளியிடுகிறார். படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இதனிடேயே ரகுமான் இசையில் கனடா நாட்டைச் சேர்ந்த நடாலி டி லுசியா என்ற பாடகி பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

    கனடாவில் பிறந்து வளர்ந்த இவர் 6 வயதில் இசையை முறைப்படி கற்றுக் கொண்டவராம். இவருடைய இசை திறமையை அறிந்த ரகுமான், தான் நடத்திய நடத்திய உலக இசைச் சுற்றுலாவில் பாட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதோடு 'கடல்' படத்தில் பின்னணி இசையும் பாடியிருக்கிறார். இந்நிலையில் நடாலி டி லுசியா ஐ படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகிறார். அவர், கார்க்கி எழுதியுள்ள 'ஐலா...ஐலா...' என்ற பாடலை ஆதித்ய ராவுடன் இணைந்து பாடியிருக்கிறார். ஐ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai