Enable Javscript for better performance
வாலு, இது நம்ம ஆளு எப்போ ரிலீஸ்? சிம்பு அறிவிப்பு - Dinamani

சுடச்சுட

    
    Simbu

    கடந்த 2012ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சிம்பு நடித்த 'போடா போடி' படம் ரிலீஸ் ஆனது.

    இந்தப் படம் வெளியாகி கிட்டதட்ட இரண்டு வருடங்களாகிவிட்டது. இதன்பிறகு சிம்பு விஜய் சந்தர் இயக்கத்தில் 'வாலு', நெல்சன் இயக்கத்தில் 'வேட்டை மன்னன்' பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு' மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் சற்றென்று மாறுது வானிலை என தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து தான் வருகிறார். ஆனால் அவற்றில் ஒரு படம் கூட முடிந்து வந்தபாடில்லை.

    காரணம், ஒவ்வொரு படமும் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. இது சிம்புவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நவம்பரில் வாலு படமும், அதனைத்தொடர்ந்து டிசம்பரில் இது நம்ம ஆளு படமும் வெளியாகும் என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர்தான். இந்தப் படங்களுக்கு சில பிரச்சினைகள்  ஏற்பட்டதால்தான் ஷூட்டிங் தாமதமானது. இப்போது அதெல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. வரும் நவம்பரில் ‘வாலு’ திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும்.

    ‘இது நம்ம ஆளு’ படத்தைப் பொறுத்தவரை இப்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ‘இது நம்ம ஆளு’ கண்டிப்பாக டிசம்பரில் வெளியாகும்.

    ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்து விட்டேன். என்னுடைய ரசிகர்களைப் போலவே நானும் எனது படங்கள் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன். நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்….” இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai