Enable Javscript for better performance
ஜெயம் ரவி பாடிய பல்பு பாடல்!- Dinamani

சுடச்சுட

    
    jayam ravi

    ஜெயம் ரவி தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். திரிஷா, அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் விவேக் மற்றும் சூரி உள்ளிட்டபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

    இப்படத்திற்காக தமன் பிரபலமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து வருகிறார். முதலில் முன்னணி இசையமைப்பாளரான இமானை அழைத்து வந்து ஒரு பாடலுக்கு பாட வைத்தார். பிறகு சிம்புவை வைத்து ‘குத்து சாங் மா நீ… ஹிட்டு சாங் மா நீ…’ என தொடங்கும் குத்துப்பாடலை பாட வைத்தார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியையும் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.

    ஜெயம் ரவி இப்படத்தில் ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான் பல்பு வாங்கிட்டேன்…’ எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலை தேவா மற்றும் விவேக்குடன் இணைந்து பாடியுள்ளார் ஜெயம் ரவி. காமெடி கலந்த பொழுது போக்கு படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai