Enable Javscript for better performance
பழமொழியின் பாதிப்பால் உருவான கதை \\\'திரி\\\'!- Dinamani

சுடச்சுட

    
    Thiri-Movie

    சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன், ஆர். பாலகோபி இணைந்து தயாரிக்கும் படம் ‘திரி’.

    இப்படத்தில் அஷ்வின் கக்கமனு, ஸ்வாதி ரெட்டி, ஜெயபிரகாஷ், கருணாகரன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் நடிக்கிறார்கள். புதுமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இதனை இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ‘சதுரங்க வேட்டை’ புகழ் கே.ஜி. வெங்கடேஷ் ஏற்றிருக்க, கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

    இதுகுறித்து இயக்குனர் அசோக் அமிர்தராஜ் கூறுகையில், ‘‘திரி’ என்பதை தூண்டிவிட வேண்டும். அந்த தூண்டல் தீபம் எரிவதற்காகவும் இருக்கலாம், இல்லை தீப்பந்தமாகவும் மாறலாம். ஆனால் தூண்டல் ஒன்றுதான். ‘தாயை போல பிள்ளை’ என்ற பழமொழி என்னை பாதித்தன் விளைவுதான் இந்தக் கதை. ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் மனித உணர்வுகளை மையமாக வைத்து படத்தை படமாக்கியுள்ளேன்.

    விறுவிறுப்பான திரைக்கதையோட்டதுடன் அமைந்துள்ள இப்படத்தில் அஷ்வின் தனது முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இப்படம் அவருக்கும் புதிய உயரத்தை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை..‘திரி’ குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்” என்று கூறினார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai