Enable Javscript for better performance
மாஸ் ரிலீஸ் தேதியில் மாற்றம்!- Dinamani

சுடச்சுட

    
    masss movie

    நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் படம் மாஸ்.

    இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஒரு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ஜோடியாக ப்ரணிதா நடிக்கிறார். மேலும் இவர்களுடன், பிரேம்ஜி, சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

    தமிழ் சினிமா இது வரை பார்த்திராத வித்தியாசமான பேய் படமாக உருவாகி வருகிறதாம் மாஸ். ஏற்கெனவே படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு படத்தை அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியிடுகிறோம் என்று அறிவித்திருந்தனர். ஆனால் பட வேலைகள் இன்னும் முடியாத காரணத்தினால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. படம் இரண்டு வாரங்கள் கழித்து மே 15ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும் மாஸ் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை இந்த மாத இறுதிக்குள் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே பல சின்ன படங்கள் விடுமுறை மாதமான மே மாத்தில் எப்படியாவது வெளியிட வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்நிலையில் மாஸ் திரைப்படம் வெளியாக இருப்பதால் அவை கொஞ்சம் சற்றே யோசிக்கும். ‘மாஸ்’ வெளியாகும் அதே நாளில் யுடிவியின் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’யும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai