Enable Javscript for better performance
மே 15-ம் தேதி களமிறங்கும் மாஸ், புறம்போக்கு!- Dinamani

சுடச்சுட

    
    purambokku movie

    'இயற்கை',' ஈ', 'பேராண்மை' படங்களுக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'.

    இப்படத்தின் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தை எஸ்.பி.ஜனநாதனின் ‘பைனரி பிக்சர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. வர்ஷன் இசையக்க படத்துக்கு என்கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புறம்போக்கு திரைப்படம் தொழிலாளர் தினமான மே1-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு இதே நாளில் கமல் ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படமும் ரீலிசாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் அன்றைய தினத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘வை ராஜா வை’ படமும் களமிறங்கவிருக்கிறது. அதில் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதால் இப்படம் மட்டும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் ‘புறம்போக்கு’ படத்தின் ரிலீஸ் தேதியை மே 15-க்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் அப்படக் குழிவினர்.

    ஆக, வெங்கடப்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘மாஸ்’ படமும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஆர்யா, ஷாம் ஆகியோர் நடித்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படமும் வரும் மே 15ஆம் தேதி உலகமெங்கும் ஒரே நேரத்தில் ரிலீஸாகவிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த இரண்டு படங்களுமே மே 1ஆம் தேதி தங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai