Enable Javscript for better performance
\\\'ரஜினி முருகன்\\\' படப்பிடிப்பு நிறைவு!- Dinamani

சுடச்சுட

    
    rajini murugan

    'காக்கி சட்டை' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'ரஜினி முருகன்'.

    இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகிறார். மேலும் ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸும், ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இதனை தயாரித்துள்ளன.

    சமீபத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியது. சிவகார்த்திகேயன் இதில் ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக நடித்திருக்கிறார். மதுரையில் சுற்றி நடக்கும் கதை என்பதால் முழுப்படப்பிடிப்பும் அங்கேயே நடத்தி இருக்கிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ரஜினி முருகன் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறவிருக்கிறது.

    ஏப்ரல் 25ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக், ஜூன் 7ம் தேதி இசை வெளியீடு, ஜூலை 17ம் தேதி படம் வெளியாகும் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்திருப்பதால் ரஜினி முருகன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai