Enable Javscript for better performance
’10 எண்றதுக்குள்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - Dinamani

சுடச்சுட

    

    ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    By dn  |   Published on : 17th April 2015 01:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vikram

    விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கும் '10 எண்றதுக்குள்ளே' படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்க, இவர்களுடன் பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, சம்பூர்ணேஷ் பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் ஒரு பாடலுக்கு சார்மி நடனமாடியுள்ளார். டி.இமான் இசையமைக்கிறார். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

    இப்படம் நெடுஞ்சாலை பயணத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இக்கதைக்காக இந்தியாவில் பல்வேறு வித்தியாசமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். வழக்கமாக விக்ரம் தான் தனது படங்களில் வித்தியாசம் காட்டுவார். ஆனால், விக்ரமின் இப்படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று கிராமத்து நேபாளி பெண் போன்ற ஒரு தோற்றமாம்.

    இந்நிலையில், விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் விக்ரம் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக தோற்றமளிக்கிறார். விக்ரம் இப்படத்திற்கு பிறகு கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai