சுடச்சுட

  
  simbu1

  அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டுள்ள இந்தச் சமயத்தில் இந்தக் கெட்டப் பாடலை வெளியிடவேண்டிய அவசியம் என்ன  என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

  இந்நிலையில் இந்தச் சர்ச்சை குறித்து சிம்பு ஒரு பேட்டியில் கூறியதாவது:

  என் பாடலை யாரோ திருடி வெளியிடுவார்கள், அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்கமுடியும்? எந்தப் பாடலையும் பாடுவது என் தனிப்பட்ட சுதந்தரம். அதில் தலையிட யாருக்கு உரிமை இல்லை. அந்தப் பாடலை நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இது எந்தப் படத்திலும் ஆல்பத்திலும் இடம்பெறாத பாடல். நானும் அனிருத்தும் பலவகையான 150 பாடல்களைத் தயார் செய்துள்ளோம். அதிலிருந்து ஒன்றை திருடி வெளியிட்டுள்ளார்கள் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai