Enable Javscript for better performance
பாலாவின் படத்தை கைப்பற்றிய ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்- Dinamani

சுடச்சுட

    

    பாலாவின் படத்தை கைப்பற்றிய ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்

    Published on : 27th January 2015 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    director bala

    இயக்குனர் பாலாவின் சண்டி வீரன் படத்தின் வெளியீட்டு உரிமையை கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எம்.எஸ்.சரவணன் கைப்பற்றியுள்ளார்.

    பரதேசி, பிசாசு ஆகிய படங்களை தொடர்ந்து பாலா தனது ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் 'சண்டி வீரன்'. இப்படத்தில் அதர்வா நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர். சற்குணம் இதனை இயக்கியுள்ளார்.

    தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டு தயாராக உள்ளது. ஆடியோ வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 'சண்டி வீரன்' படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை 'மாசாணி' படத்தை தயாரித்த ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எம்.எஸ்.சரவணன் கைப்பற்றியுள்ளார்.

    இவர் ஏற்கெனவே, தனது கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் 'சலீம்', 'வேலையில்லா பட்டதாரி', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வெளியிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai