Enable Javscript for better performance
\\\"ஐ\\\' படத்துக்கு எதிரான மனு: விசாரணைக்கு ஏற்பு- Dinamani

சுடச்சுட

    
    i

    நடிகர் விக்ரம் நடித்துள்ள "ஐ' திரைப்படத்துக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் திருநங்கை தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

    நடிகர் விக்ரம் நடித்து, இயக்குநர் சங்கர் இயக்கிய "ஐ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரித்துள்ளதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா மாவட்ட 6-ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், சமீபகாலமாகத்தான் திருநங்கைகள் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு, சில அடிப்படை உரிமைகளும் பெற்றுவருகின்றனர். ஆனால், "ஐ' திரைப்படத்தில் திருநங்கைகளை தவறாகச் சித்தரித்துள்ளனர். ஆகவே, எங்களை இழிவுபடுத்திய இப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    மனுவை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai