Enable Javscript for better performance
கயல் நாயகியை மிரட்டிய பாம்பு! - Dinamani

சுடச்சுட

    
    kayal actress

    ‘பொறியாளன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி.

    தொடர்ந்து வந்த பிரபுசாலமனின் ‘கயல்’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதனால் தற்போது அம்மணி இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ‘சண்டி வீரன்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும், 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

    இதில் சற்குணம் இயக்கி வரும் ‘சண்டி வீரன்’ படப்பிடிப்பு சமீபத்தில் தஞ்சாவூரிலுள்ள ஏரி ஒன்றில் நடந்திருக்கிறது. மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிடிப்பின் போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்ததாம். ஆனால் இதை கவனிக்காத அவர் தைரியமாக நடித்து வந்திருக்கிறார்.

    ஒரு கட்டத்தில் பாம்பு தன் பக்கம் இருப்பதை உணர்ந்ததும் அந்த இடத்தைவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார். பிறகு அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் எல்லாம் சகஜம் என்பதை உணர்ந்துகொண்டு பயத்துடன் நடித்து முடித்திருக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai