Enable Javscript for better performance
தண்ணியடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பார்த்தால் பயம்: புதுமுக நாயகி நேஹா ரத்னாகரன்- Dinamani

சுடச்சுட

    

    தண்ணியடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பார்த்தால் பயம்: புதுமுக நாயகி நேஹா ரத்னாகரன்

    Published on : 28th January 2015 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    neha

    வி.வி.ஆர் சினி மாஸ்க் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.

    இப்படத்தின் நாயகனாக சின்னத்திரை தீபக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நேஹா ரத்னாகரன் அறிமுகமாகிறார். இப்படத்தை S.N. சக்திவேல் இயக்கியிருக்கிறார். ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியை சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன்.

    இந்தப் படத்தின் நடித்த அனுபவம் பற்றி பேசிய நேஹா ரத்னாகரன், “மாடலிங், விளம்பர படங்கள்ன்னு நடித்துக் கொண்டு இருந்தேன். எதையும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. அப்படியே சினிமாவிலும் நடித்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். கேரளத்து பெண்கள் பிரபலமாவது தமிழில்தானே. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னை மட்டும் விட்டு விடுமா என்ன…?

    அப்போதுதான் இந்த ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ‘தீபிகா’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு துருதுரு வாயாடியான சென்னை பெண்ணாக வருகிறேன். ‘மிஸ் மலபார்’ போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிப்பதே என் குறிக்கோள்.

    “ஹீரோ தீபக், நடிப்பில் சீனியராக இருந்தாலும், நான் முதல் படம் நடிக்கிறேன் என்று எனக்கு உதவி செய்தார். அனைவரிடமும் தன்மையாய் பழகக் கூடியவர். காமெடி படம் என்பதாலோ என்னவோ நான் சீரியசான காட்சிகள் நடித்தாலும் சுற்றி இருப்பவர்கள் சிரித்து கொண்டே இருப்பார்கள். எனினும் இயக்குனர் எனக்கு அனைத்து காட்சிகளையும் சரிவர செய்ய உதவினார்.

    “படத்தின் தலைப்பு போல் ஏதேனும் தண்ணியால கண்டமான அனுபவம் உண்டா..?” என்று கேட்ட பொழுது “எனது ஊரைச் சுற்றிலும் தண்ணீர் மட்டுமே காணப்படும். தண்ணீரில் பயம் என்றெல்லாம் இல்லை. எனினும் தண்ணியடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பார்த்தால், எங்கே நம் மீது மோதி விடுவார்களோ என்று எனக்கு மிகவும் பயமாக இருக்கும்..” என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai