Enable Javscript for better performance
மயங்கி விழுந்த நடிகை விந்தியா: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    மயங்கி விழுந்த நடிகை விந்தியா: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

    Published on : 28th January 2015 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vindhya

    நடிகை விந்தியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சங்கமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விந்தியா. தொடர்ந்து சார்லி சாப்ளின், நம்ம வீட்டு கல்யாணம், கண்ணம்மா, சங்கமம், விஸ்வநாதன் ராமமூர்த்தி உள்ளிட்ட பல படங்களில் நடிதிருக்கிறார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு குறையவே அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

    சில தினங்களுக்கு முன் விந்தியா வாரநாசி சென்று திரும்பியிருக்கிறார். வந்ததிலிருந்து இவருக்கு அடிக்கடி உடலநலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த நான்கு நாட்களாக தினமும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை விந்தியாவின் உடல்நிலை மேலும் மோசமடையவே, திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையின் போது நடிகை விந்தியாவின் கணையம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அவர் வரும் மூன்று நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai