விஜய் - அட்லீ பட டைட்டில், முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் - அட்லீ பட டைட்டில், முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜூன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்தாலும் இதுவரை படத்தின் தலைப்பை வெளியிடாமல் இருந்தார்கள். இன்று தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெறி : இதுதான் விஜய் -  அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு. நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டார்.

பட பூஜையின்போது இயக்குநர் அட்லீ இவ்வாறு பேட்டியளித்திருந்தார்.

விஜய்யுடன் படம் பண்ணவேண்டும் என்பது என் கனவு. நான் அவருடைய ரசிகன். ஒரு விஜய் ரசிகர் படம் பண்ணினால் எப்படி இருக்குமோ அப்படி படம் இருக்கும். எம்.ஜி.ஆர், ரஜினி படத்தை எப்படி விரும்பிப் பார்ப்போமோ அப்படி படம் இருக்கும். விஜய் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். என் படத்தைப் பிடிக்கிறவங்களுக்கு இந்தப் படமும் பிடிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com