சுடச்சுட

    

    அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது மறுத்துவந்தார். இந்நிலையில் இப்போது போத்தீஸ் துணிக்கடையின் தீபாவளி விளம்பரத்தில் நடித்துள்ளார் கமல் (இதற்கு முன்பு ஒரு போத்தீஸ் விளம்பரம் வெளியாகியுள்ளது).

    இந்த விளம்பரத்தை பைவ் ஸ்டார், ஆய்த எழுத்து, ஆட்டோகிராப் படங்களில் நடித்த கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். போத்தீஸ் தீபாவளி விளம்பரத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.