சுடச்சுட

  

  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்பு 'ஃபத்வா' அறிவிப்பு!

  By எழில்  |   Published on : 12th September 2015 05:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முஹம்மது நபியின் பெயரைத் தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்' என்கிற இரானிய மொழி திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், பிரபல இயக்குநர் மஜித் மஜிதி உள்ளிட்டோருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஃபத்வா (மார்க்கத்தீர்ப்பு) விதித்துள்ளது.

  ஃபத்வா விதித்த ராஸா அமைப்பின் தலைவர் சயீத் நூரி இதுபற்றி கூறும்போது, இந்த தலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். படம் பிடிக்கவில்லையென்றால் மக்கள் இந்த தலைப்பை கிண்டல் செய்ய வாய்ப்புண்டு. அது நபிகளுக்கு அவமதிப்பாகும் என்றார். இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

  56 வயது மஜித் மஜிதி, சில்ரன் ஆஃப் ஹெவன் முதலிய பல சிறப்பான படங்களை இயக்கியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai