Enable Javscript for better performance
விஜய்யின் ‘தெறி’ படத்துக்கு கேரளாவில் வரவேற்பு எப்படி?- Dinamani

சுடச்சுட

    

    விஜய்யின் ‘தெறி’ படத்துக்கு கேரளாவில் வரவேற்பு எப்படி?

    By DN  |   Published on : 15th April 2016 04:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijay

    அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியானது.

    தெறி, கேரளாவில் மட்டும் 200-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. பல திரையரங்குகளில் அதிகாலையிலேயே முதல் காட்சிகள் தொடங்கியுள்ளன. தெறி படத்தின் கேரள உரிமத்தை ரூ. 5.6 கோடிக்கு ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் என்கிற நிறுவனம் வாங்கியிருந்தது.

    கேரளாவில், தெறி படத்தின் முதல்நாள் காட்சிகள் அனைத்தும் அரங்கு நிறைந்த வண்ணம் ஓடியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கேரளாவில் வெளியான மலையாளம் அல்லாத படங்களின் முதல் நாள் வசூலில் தெறி சாதனை செய்துள்ளதாகப் படக்குழுத் தரப்பு கூறியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai