சுடச்சுட

  

  மாவோ குறித்த கதை: வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்

  By  சென்னை,  |   Published on : 23rd March 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2

  சீன முன்னாள் அதிபர் மாவோவை ரஷிய அதிபர் என்று கூறியதற்காக வருத்தம் கோரினார் நடிகர் விஜய்.
   கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தெறி. இயக்குநர் அட்லி இயக்கி வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
   இவ்விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் குட்டிக் கதை ஒன்றை சொன்னார். அதில் சீனாவின் முன்னாள் அதிபர் மாவோ என்பதற்குப் பதிலாக, ரஷியாவின் முன்னாள் அதிபர் மாவோ என்று பேசினார்.
   இந்தத் தவறை இணைய தளங்களில் பலரும் சுட்டிக் காட்டி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
   இந்த நிலையில் விஜய் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ள செய்தியில், தனது பேச்சில் நடந்த தவறு எதேச்சையானது. அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai