Enable Javscript for better performance
உதயநிதி படத்துக்கு வரிச் சலுகை மறுப்பு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    உதயநிதி படத்துக்கு வரிச் சலுகை மறுப்பு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    By DN  |   Published on : 04th May 2016 09:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Manithan

    சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடித்த `மனிதன்' படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் வணிகவரித்துறை பதிலளிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    திமுக பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி நடித்துள்ள மனிதன் என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இதற்கு கேளிக்கை வரி விலக்கு கேட்டு, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விண்ணப்பித்தது.

    மனிதன் என்ற வார்த்தை தமிழ் இல்லை. மாந்தன், மாந்தர் என்பதுதான் தமிழ் வார்த்தை என்று 5 நபர் கொண்ட குழு தாக்கல் செய்த அறிக்கையின்பேரில், கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து தமிழக அரசு ஏப்ரல் 29-இல் அரசாணை பிறப்பித்துள்ளது.

    இதை எதிர்த்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மனிதன் படத்தை பார்த்த குழுவில் உள்ளவர்களுக்கு தமிழ் மொழி குறித்து போதிய ஞானம் இல்லை. அதனால், மனிதன் என்ற வார்த்தை தமிழ் இல்லை என்று கூறி அறிக்கை கொடுத்துள்ளனர். ஏற்கெனவே, ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த மனிதன், உயர்ந்த மனிதன் போன்ற படங்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே கேளிக்கை வரிவிலக்கு அளித்துள்ளது. ஒரு விஷயத்தில் இரண்டு நிலைப்பாடுகளை எடுக்க முடியாது. எனவே, வரி சலுகையை மறுத்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன்முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட வணிகவரித்துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை ஜூன் மாதத்துக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai