சுடச்சுட

  

  பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் இவர் தான்!

  By Muthumari  |   Published on : 08th September 2019 04:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  download

   

  பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3, 70 நாட்களைக் கடந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் சேரன், கவின், லாஸ்லியா, முகேன், ஷெரின் ஆகியோர் இருக்கின்றனர்.

  இவர்களில் கவின் வழக்கம்போல இந்த வாரமும் அதிக வாக்குகளை பெற்று காப்பாற்றப்படுகிறார். சேரன் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற உள்ளதாகத் தெரிகிறது.

  சற்றுமுன் வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் சேரன் வெளியேற்றப்படுவதாக கமல் ஹாசன் தெரிவிக்கிறார். லாஸ்லியா, சேரனிடம், 'இது நியாயமல்ல; இந்த வாரம் நான் தான் போக வேண்டும்; நீங்கள் போகக்கூடாது' என்று சேரனிடம் அழுகிறார். 

  மேலும், கடைசியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கஸ்தூரி ரகசிய அறையில் தங்க மறுப்பு தெரிவித்தார். எனவே, இந்த வாரம் சேரன் ரகசிய அறையில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. 

  வார இறுதியில் கமல்ஹாசன் வரும் நிகழ்வில், நேற்று வனிதாவை வறுத்தெடுத்த கமல் இன்றும் வணிதாவிடம் பல்வேறு கேள்விக்கணைகளை தொடுக்க உள்ளதாகத் தெரிகிறது. என்னவோ, இந்த வாரம் கமல் ஹாசன், கவினை கேள்வி கேட்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai