பாலிவுட்டை விட அதிக ஊதியம் பெறும் தென்னிந்திய நடிகர்கள்

தென்னிந்திய நடிகர்கள் அவர்களுக்கு இணையான பாலிவுட் நடிகர்களை விட அதிக அளவிலான ஊதியத்தைப் பெறுகின்றனர்.
பாலிவுட்டை விட அதிக ஊதியம் பெறும் தென்னிந்திய நடிகர்கள்

தென்னிந்திய நடிகர்கள் அவர்களுக்கு இணையான பாலிவுட் நடிகர்களை விட அதிக அளவிலான ஊதியத்தைப் பெறுகின்றனர். 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட டாப் 100 பிரபலங்களின் பட்டியல் மற்றும் சமீபத்தில் வெளியான படங்களை ஒப்பீடு செய்து இது கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியத் திரையுலகில் பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே அதிக அளவில் வசூல் ரீதியான சாதனை படைப்பவையாக இருந்தன. ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தென்னிந்திய  திரைப்படங்களும் அதிக வசூல் படைக்கும் தரமானத் திரைப்படங்களை கொடுத்தன. இவை நடிகர்களின் ஊதியத்தையும் அதிகரித்தது.

2019-ம் ஆண்டு முதல் அதிக ஊதியம் பெறும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பாலிவுட்டில் ரூ. 85 கோடி ஊதியம் பெறும் ஆமீர் கானை 2.0 திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் முந்தினார்.

மலையாலத் திரையுலகில் முன்னணி நடிகரான மோகன் லால் தனது லூசிஃபர் திரைப்படத்தின் அமோக வெற்றியால் (ரூ.64.5 கோடி) ரூ.58.73 கோடி ஊதியம் பெறும் ஹிரித்திக் ரோஷனை அவர் பின்னுக்குத் தள்ளினார்.

இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்கவைத்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரூ.50 கோடி ஊதியம் பெறும் நடிகர் பிரபாஸ், அவர் காலத்து நடிகரான ரூ.30.5 கோடி ஊதியம் பெறும் ஆயுஷ்மான் குராணாவை முந்தினார்.

தளபதி விஜய் (ரூ.30 கோடி) நடித்த பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூலைக் குவித்ததன் மூலம், கபீர் சிங், பத்மாவதி போன்ற படங்களில் நடித்த ஷாகித் கபூரை (ரூ.12.75 கோடி) முந்தினார்.

மகரிஷி என்ற மெஹா ஹிட் திரைப்படத்தின் மூலம் நடிகர் மகேஷ் பாபு (ரூ.35 கோடி) ரூ.17.03 கோடி ஊதியம் பெறும் சையிப் அலிகானை முந்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com