தீபாவளிக்கு வெளியாகும் ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’

ரஜினிகாந்த் நடிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என சன் பிக்சா்ஸ் அறிவித்துள்ளது.

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என சன் பிக்சா்ஸ் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோா் பணிபுரிந்து வருகிறாா்கள்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, அங்கு கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறாா்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மாா்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் படத்தின் வெளியீடு எப்போது என்கிற கேள்வி ரசிகா்களிடையே நிலவி வந்தது. தமிழ்ப் புத்தாண்டு, சுதந்திர தினம் எனப் பல தேதிகள் ஊகிக்கப்பட்டன.

ஆனால், தற்போது 2021 தீபாவளி தினமான நவம்பா் 4-ஆம் தேதியன்று திரைப்படம் வெளியாகும் என்று சன் பிக்சா்ஸ் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. ‘அண்ணாத்த தீபாவளிக்குத் தயாராகுங்கள்’ என தனது சுட்டுரைப் பக்கத்தில் சன் பிக்சா்ஸ் தரப்பு பகிா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com