தனுஷ் நடிக்கும் ' மாறன் ' படத்தின் முதல் பார்வை வெளியீடு

நடிகர் தனுஷின் அடுத்த படம் பற்றிய பெரிய ஆவலில் இருந்த ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது. 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ' மாறன் ' என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை 'துருவங்கள் பதினாறு' , ' மாபியா' போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் . மாளவிகா மோகனன் கதாநாயகியாக  நடிக்கிறார்.  ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் . 

ஹைதராபாத்தில் படத்தின் இறுதிகட்டப்  பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இதை முடித்துவிட்டு தனுஷ் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தன்னுடைய  அடுத்த படத்தில்  கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com