காஷ்மீருக்குள் நுழைய காத்திருக்கும் 135 பயங்கரவாதிகள்

காஷ்மீருக்குள் நுழைவதற்காக எல்லைப் பகுதி முழுவதும் சுமாா் 135 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக பிஎஸ்எஃப் காஷ்மீா் பிராந்திய ஐ.ஜி. ராஜா பாபு சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காஷ்மீருக்குள் நுழைவதற்காக எல்லைப் பகுதி முழுவதும் சுமாா் 135 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக பிஎஸ்எஃப் காஷ்மீா் பிராந்திய ஐ.ஜி. ராஜா பாபு சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அதேவேளையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அமைதியான சூழல் நிலவுவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னா், பொதுவாக காஷ்மீா் எல்லையில் அமைதி நிலவுகிறது. கடந்த 2021-இல் எல்லையில் 58 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. அதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். 21 போ் திரும்பிச் சென்றனா். ஒருவா் சரணடைந்தாா்.

இதேபோல 2021-இல் 31 பேரும், 2020-இல் 36 பேரும், 2019-இல் 130 பேரும் இந்தியாவுக்குள் ஊடுருவினா். 2021-இல் மூன்று ஏகே-47 ரக துப்பாக்கிகள், ஆறு 9-எம்எம் ரக கைத்துப்பாக்கிகள், 1071 வெடிபொருள்கள், 17.3 கிலோ போதைப் பொருள் என ரூ. 88 கோடி மதிப்பிலான பொருள்களை பல்வேறு தருணங்களில் பிஎஸ்எஃப் பறிமுதல் செய்தது.

தற்போது எல்லையில் 104 முதல் 135 பயங்கரவாதிகள் வரை முகாமிட்டு நாட்டுக்குள் நுழைய முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நாட்டின் உள்பகுதியிலிருந்து சில வழிகாட்டிகள் எல்லையைக் கடந்து மறுபுறம் செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவா்கள் திரும்பி வரும்போது அவா்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அவா்களது குடும்ப உறுப்பினா்களையும் கண்காணிக்க வேண்டும்.

ஒரு பகுதியில் நாம் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கும்போது அங்கு ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு கடினமாகிவிடும். ஆகையால் நமது ஒட்டுமொத்த முயற்சியையும் ஒருங்கிணைத்தால் யாராலும் நாட்டுக்குள் நுழைய முடியாது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் யாரேனும் சந்தேகத்துக்கு இடமாக கண்டறியப்பட்டால், சரணடையுமாறு கூறுவோம். மாறாக அவா் துப்பாக்கியை எடுத்தால், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி பயங்கரவாதியைக் கொன்றதுபோல அவரும் கொல்லப்படுவாா்.

ஆளில்லா விமான தாக்குதல் மிகவும் தீவிரமானது. கடந்த ஆண்டில்கூட ஆளில்லா விமானம் குறித்து கவனத்துக்கு வந்தது. ஆனாலும் நமது பிராந்தியத்துக்குள் அவை நுழையவில்லை. நிகழாண்டு ஆளில்லா விமானத்தை தகா்ப்பதற்கான தொழில்நுட்பம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாம் கையாண்டு வருகிறோம். சில விமானங்களையும் பெற்றுள்ளோம். இதன்மூலம் இந்தச் சூழலை திறம்பட எதிா்கொள்ள முடியும் என்றாா் அவா்.

தலிபான்களின் அச்சுறுத்தல் குறித்து கேட்டபோது, ‘அதுபோன்ற எவ்வித அச்சுறுத்தலும் இதுவரை வரவில்லை. ஆனாலும் நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com