சுடச்சுட

  

  திரையரங்கில் தேசிய கீதம்: தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும்!

  By DIN  |   Published on : 01st December 2016 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Ramanathan

  அபிராமி ராமநாதன்

   

  திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்கும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

  சென்னையில் அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியது:-

  திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் ஒலிப்பது கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம். இந்திய சுதந்திரத்தின் மேன்மையை போற்றும் விதத்தில் இந்த உத்தரவு அமையும்.

  அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சுதந்திரத்தை உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. இந்திய தேசிய கொடிக்கு உரிய மரியாதை கொடுக்கும் உணர்வு அனைவரிடத்திலும் இதனால் பரவும். குறிப்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்கும் என்பதால், அனைத்து திரையரங்குகளிலும் படம் தொடங்குவதற்கு முன்பு, தேசிய கீதத்தை உடனடியாக ஒலிக்க வைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்களை வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார் அபிராமி ராமநாதன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai