சுடச்சுட

  
  vijay-rajini1

   

  தளபதியும் இளைய தளபதியும் படப்பிடிப்புத் தளத்தில் நேற்று சந்தித்துக்கொண்டார்கள்.

  பைரவா படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. படப்பிடிப்பு நடைபெற்ற சென்னை எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் தான் 2.0 படப்பிடிப்பும் நடைபெற்று வந்ததை அறிந்த விஜய், உடனே ரஜினியை நேரில் சென்று சந்தித்தார். பைரவா வெற்றி பெற தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி. ஆனால் இந்தச் சந்திப்பின் புகைப்படம் வெளிவரவில்லை. காரணம், அப்போது ரஜினி 2.0 படக் கதாபாத்திரத்துக்கான தோற்றத்தில் இருந்ததால். 

  இதன்பிறகு பைரவா இயக்குநர் பரதனும் தயாரிப்பாளர் வெங்கட் ரமண ரெட்டியும் ரஜினியைச் சந்தித்தார்கள். உழைப்பாளி படத்தைத் தயாரித்தவர், வெங்கட் ரமண ரெட்டி என்பதால் அந்தக் கால அனுபவங்களை இயக்குநர் பரதனிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் ரஜினி. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai