சுடச்சுட

  

  சிரஞ்சீவியுடன் நடனமாடிய அனுபவம்: ராய் லட்சுமி வியப்பு!

  By DIN  |   Published on : 02nd December 2016 03:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rai_laxmi111xx

   

  சிரஞ்சீவியுடன் நடனமாடுவது என்பது எளிதான விஷயமில்லை. காற்று வேகத்தில் அவர் ஆடுகிறபோது அதற்குச் சமமாக ஆடமுடியாமல் திணறிய நடிகைகள் பலர். இதனாலேயே அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அவருடன் நடனமாட பலர் ஆர்வம் செலுத்துவார்கள்.

  இப்போது, ராய் லட்சுமியும் சிரஞ்சீவியுடன் இணைந்து நடனமாடியுள்ளார். சிரஞ்சீவி நடித்துவரும் தெலுங்குப் படத்தில் அவருடன் இணைந்து நடனமாடியுள்ளார்.  

  இந்த வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை. என் கனவு நனவாகியுள்ளது. ஒரு லெஜண்டுடன் நடனமாட வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. நீங்கள் அனைவரும் இந்தப் பாடல் காட்சியைப் பார்க்கவேண்டும் என்றார். 

  கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துவருகிறார். காஜல் அகர்வால், தருண் அரோரா நடிக்கும் இந்தப் படத்தை விநாயக் இயக்குகிறார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai