சுடச்சுட

  

  சென்னைத் திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ்ப்படங்கள்!

  By DIN  |   Published on : 02nd December 2016 05:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  theatres

   

  சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 14-ஆவது சர்வதேச சென்னைத் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது. உலக சினிமாக்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, தமிழில் வெளிவந்த சிறந்த படங்களுக்கு வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விழா, 14-ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி சென்னையில் தொடங்கும் இந்த விழா, டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

  இந்தப் படவிழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ்ப்படங்கள்:

  24, அம்மா கணக்கு, தேவி, தர்மதுரை, இறைவி, ஜோக்கர், கர்மா, நானும் ரெளடிதான், பசங்க 2, ரூபாய், சில சமயங்களில், உறியடி.

  சர்வதேசப் படங்களின் அணிவகுப்பு: தமிழக அரசின் துணையோடு இந்திய திரைப்பட திறனாய்வு கழகமானது தமிழ்த் திரை அமைப்புகளோடு, "இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுன்டேஷன்' இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
  இந்த விழாவின் சிறப்பு அம்சமாக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 180-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

  ஈரான், கொரியா, ஆஸ்திரியா, துருக்கி, ஜப்பான், சீனா, பாகிஸ்தான், நேபாளம், நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச படங்கள் இதில் அணி வகுக்கவுள்ளன. தமிழ் சினிமாவுக்கான போட்டிப் பிரிவில் கடந்த ஆண்டு வெளிவந்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படங்களும் திரையிடப்படவுள்ளன.

  இந்தியன் பனோரமா பிரிவில் 15 படங்களும், சர்வதேச அளவில் விருதுகளும், ஏகோபித்த விமர்சனங்களையும் பெற்ற படங்களும் இடம் பிடிக்கின்றன. உலகப் படங்களின் வரிசையில் ஆஸ்கர் விருது மேடையை அலங்கரித்த பல படங்களும் இடம் திரையிடப்படவுள்ளன. 

  விருதுகள்: விழாவின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படங்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. www.ticketnew.com என்ற இணையத்தில் நுழைவுக் கட்டணங்களை பதிவு செய்து கொள்ளலாம். சென்னை ராயப்பேட்டை, உட்லாண்ட்ஸ் திரைப்பட வளாகத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி பதிவும் செய்து கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai